உள்நாடு

கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீட்டு விழா

கல்குடா முஸ்லிம் வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்ட ‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை (10.07.2025) மாலை ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.சி.ஏ.நாசர் கலந்து சிறப்பித்தார்.

வரவேற்பு உரையினை அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முஹம்மது நடாத்தியதுடன் முதன்மை உரையினை பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் நடாத்தியதுடன் நூல் அறிமுகவுரை எழுத்தாளர் ஓட்டமாவடி எஸ்.எச்.அறபாத் ஸஹ்வியும் நூல் மதிப்புரையினை ஃபாத்திஹ் உயர் கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரவூஃப் ஜெயினும் நன்றி உரையினை கவிஞர் எஸ்.நளீம் நடாத்தியதுடன் நிகழ்ச்சி தொகுப்பினை ஊடகவியலாளர் எச்.எம்.எம்.பர்ஸானும் நிகழ்த்தினர்.

முதற்பிரதியை மூத்த எழுத்தாளரும் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான எஸ்.எல்.எம்.ஹனீபா பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எச்.எம்.எம்.பைறூஸ், பிரதேச கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் வாதிகள் சமூகத்தலைவர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், வெளியூர் கல்விமான்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எஸ்.எம்.எம். முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *