கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் அன்பளிப்பு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் மீராவோடை பொது நூலகத்திற்கு பயனுள்ள நூல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (11) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கல்குடா முஸ்லிம் வரலாற்று ஆய்வு மையம் நேற்று (10) வெளியிட்ட கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் எனும் நூல் ஒன்றை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வின் நூலகர் எம்.எம்.பாத்திமா பானுவிடம் அன்பளிப்பு செய்துள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)