புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து எம்.பீ.க்களுக்கு விளக்கமளித்த பிரதமர் ஹரிணி.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது நிகழ்ச்சி இன்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகிய அடிப்படை விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
