அ. இ. ஜ. உலமா புத்தளம் நகரக்கிளையினால் கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் சுகாதார தினைக்களம்(MOH) புத்தளம் மாநகர சபை, fpa நிறுவனம் மற்றும் Panda Baby நிறுவனம் இணைந்து 120 கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு 07.07.2025 புத்தளம் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்கை அ.இ.ஜ. உ. புத்தளம் நகரக்கிளையின் செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானி அவர்களின் கிராஅத்தை தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அ.இ.ஜ. உ. புத்தளம் நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து MOH வைத்திய அதிகாரி வைத்தியர் நப்பா அவர்கள் மூலமாக 120 கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு நடைப்பெற்றது.
ஒவ்வொரு கர்ப்பணிப்பெண்களுக்கான 2000 ரூபா பெருமதியான (கர்ப்ப காலத்தில் தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதுமட்டும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சோதிக்கபடும் FBC,சுகர் யூரின் மற்றும் அனைத்து சோதனைகளையும் இலவசமாக fpa பெற்றுக் கொள்ள முடியும் என்ற வழிகாட்டலும் காட்டப்பட்டது.




(ஊடகப்பிரிவு
அ.இ.ஜ.உ புத்தளம் நகரக்கிளை)