அனுராதபுரம் கல்வி வலயத்தின் தடகள விழாவின் நிறைவு விழா
அனுராதபுரம் கல்வி வலய தடகள விழாவின் நிறைவு விழா வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் வடமத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
அனுராதபுரம் பகுதியில் உள்ள 127 பாடசாலை களைச் சேர்ந்த 3000 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு பங்கேற்றது.
அனுராதபுரம் பிராந்தியத்தில் உள்ள 127 பாடசாலைகளில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் குழுவினருக்கு ஆளுநர் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அனுராதபுரம் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற குழுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு ஆளுநர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)