பாணந்துறை ஜீனியஸ்பார்க் வருடாந்த பரிசளிப்பு விழா..!
பாணந்துறை ஹேனமுல்லையில் 18 வருடங்களாக இயங்கும் ஜீனியஸ்பார்க் கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13.07.2025 அன்று மொரட்டுவை, எகொட உயன அரபாத் முஸ்லீம் மகா வித்யாலயத்தில் ஜீனியஸ்பார்க் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிமாயா இப்ராஹிம் தலைமையில் தினகரன் வார மஞ்சரி ஊடக அனுசரணையுடன் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் பிரதம அதிதிகளாக நஜீப் ஹாஜியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் நஜீப் அமீர் ஆலிம், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இவர்களுடன் விசேட அதிதிகளாக SIP அபாகஸ் கல்வி நிறுவனத்தின் தேசியத் தலைவர் ரிஷார்ட் ரஹீம் மற்றும் SIP அபாகஸ் கல்வி நிறுவனத்தின் மருதானை கிளை பணிப்பாளர் எம். எப். நிரோஷா உட்பட சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பி.எம். முக்தார், ஏ.எல் .எம். சத்தார் ஆகியோருடன் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவில் 2024 ஆம் வருடத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். நிகழ்வில் மாணவர்களின் கலையம்சங்களும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பி. எம். முக்தார்)