எம்.பீ ஆக சத்தியப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜெயவீர
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த ஜெயவீர சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, இவரது பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதன்படி, வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிஷாந்த ஜயவீரவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்பதற்காக ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்தார்.