உலகம்

பெண்கள் உரிமை மீறல்கள் தொடர்பாக தலிபான் தலைவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை..!

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலிபானின் உயர்மட்டத் தலைவருக்கும் ஆப்கானிஸ்தானின் உச்ச நீதிமன்றத் தலைவருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (08) வெளியிடப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியாணையில் தலிபான் தலைவர்; நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து பாலின அடிப்படையில் மனிதகுலத்திற்கு எதிரான துன்புறுத்தலுக்கு ‘உத்தரவிட்டமை, தூண்டியமை அல்லது நிர்ப்பந்தித்தமை’ என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலிபான் உயர்மட்டத் தலைவர் ஹிபதுல்லா அகுன்சாடா மற்றும் ஆப்கானிஸ்தானின் உச்ச நீதிமன்றத் தலைவர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்மே மேற்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளைத் துன்புறுத்துவதோடு, ‘ஏனைய நபர்களையும் குறிவைத்ததாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது… ஏனெனில் பாலியல் அல்லது பாலின அடையாளத்தின் சில வெளிப்பாடுகள் அல்லது பாலியல் மற்றும் பாலின அடையாளத்தின் சில வெளிப்பாடுகள் பாலினம் தொடர்பான தலிபானின் கொள்கைக்கு முரணானதாகக் கருதப்பட்டமையாகும்.’

‘சிறுமிகள் மற்றும் பெண்களின் நண்பர்கள் என கருதப்படும் மக்களும் அரசியல் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அந் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, தாலிபான்கள் பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகளை கடுமையாகக் குறைத்தனர், ‘கல்வி, இரகசியமான தனியுரிமை மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் இயக்கரீதியாக செயற்படும் சுதந்திரம், கருத்து வெளிப்பாப்டுச் சுதந்திரம், சிந்தனை செய்வதற்கான சுந்திரம் , மனசாட்சிப்படி நடக்கும் சுதந்திரம் மற்றும் சமய சுதந்திரம், ஆகியவற்றுக்கான அவர்களின் உரிமைகளை ஆணைகள் மற்றும் கட்டளைகளைப்; பயன்படுத்தி மட்டுப்படுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீண்டும் திரும்பப் பெறப்படுவது பரவலாகவும் கடுமையாகவும் நடைபெறுகின்றது. புதிய விதிமுறைகளில் பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என நிர்ப்பந்திக்கும் வழிமுறை ஒழுக்கச் சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது ஆண் ‘பாதுகாவலர்’ இல்லாமல் பயணம் செய்யவோ தடை விதிக்கின்றன.

சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, குழந்தைத் திருமணங்கள் மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து தப்பி ஓடுபவர்களுக்கான தான்தோன்றித்தனமான தடுப்புக்காவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஒரு பெண் வீட்டிற்கு வெளியே தனது முகம், உடல் மற்றும் குரலை மறைக்க வேண்டும் என்ற தேவையின் ஒரு பகுதியாக, பெண்களின் குரல்கள் பொது வெளியில்; கேட்கப்படுவதைத் தாலிபான்கள் தடை செய்துள்ளன.

அதிகாரிகள் பெண்களை பொது வெளியில்; கல்லெறிந்து கொல்லத் தொடங்குவார்கள் என தாலிபானின் தலைவர் அகுன்சாடா, மார்ச் 2024 இல் அறிவித்தார்.

தாலிபான்கள் பெண்கள் இடைநிலைக் கல்வி கற்பதனை தடை செய்துள்ளனர், மேலும் பெரும்பாலான அரசாங்க உத்தியோகங்களிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டுள்ளனர்.

தகவல் மீள்தன்மை மத்திய நிலையத்தின் ஆப்கான் விட்னஸ் திட்டத்தின் கூற்றுப்படி, ஆண்களும் சிறுவர்களும் கூட பாலின ரீதியான மீறல்களை எதிர்கொண்டுள்ளனர், இதில் ‘இஸ்லாமியத்திற்கு எதிரான’ உடைகள் அல்லது சிகை அலங்காரங்களுக்கு எதிரான விதிகளை மீறியதற்காக அடிக்கப்படுதல்; அல்லது தடுப்புக்காவல் வைக்கப்படுதல் ஆகிய நெருக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.   

(எம்.ஐ.அப்துல் நஸார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *