கண்டி ரணபிம ரோயல் கல்லூரியில் ” க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்”..!
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் கண்டி கண்ணொருவை ரணபிம ரோயல் கல்லூரியில் க்ளீன் பாடசாலை வேலை திட்டம் இன்று (9) முன்னெடுக்கப்பட்டது.
அதிபர் மாலக்க பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் கல்லூரியின் சுற்று வட்டாரங்கள் , மண்டபங்கள், வகுப்பறைகள், என்பனவற்றில் சுத்திகரிப்பு வேலைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கல்லூரியில் தமிழ் சிங்கள ஆங்கில மொழி மூல பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர் .
கிளீன் பாடசாலை வேலை திட்டத்தை முன்னிட்டு வீதி நாடகமொன்றும் வெகு சிறப்பாக மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.
(ரஷீத் எம். றியாழ்)



