கண்டி சாஹிரா கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா மேலைத்திட்டம்..!
கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரியிலும் இன்று (9) க்ளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது .
கல்லூரி அதிபர் சட்டத்தரணி பைசால் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது பாடசாலையின் சுற்றுச்சூழல் சுத்திகரிப்புகள் , மற்றும் டெங்கு நுளம்பு பரவாதிருக்கும் வழிவகைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக மாணவர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதிபர் , பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
( ரஷீத் எம். றியாழ்)

