உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் தொடராபில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

பிள்ளையான்” என்று  அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோது ​​ 2019 உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு   தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவர் அவற்றைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன,” என்று அமைச்சர் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை மேற்கோள் காட்டி கூறினார்.

இந்த கூற்று 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட உயிர்த்த ஞாயிறு   தாக்குதல் தொடர்பான  நீண்டகால விசாரணையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *