உள்நாடு

அனுராதபுர மாநகர சபையின் மாதாந்த கூட்ட மதிய உணவு நிறுத்தம்

அனுராதபுரம் மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை நிறுத்தி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அசேல விஜேசிங்க கொண்டு வந்த பிரேரணை கடந்த (08) சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (08) மாநகர சபை கேட்போர் கூடத்தில் மேயர் என்.கருனாரத்ன தலைமையில் நடைபெற்றது.

குறித்த முன்மொழிவை முன்வைத்த மாநகர சபை உறுப்பினர் அசேல விஜேசிங்க மேலும் தெரிவிக்கையில், 

இந்த அமர்வில் கலந்து கொள்ளும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு இனி தேவையில்லை. இதற்காக மாதாந்த செலவீனமாக இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகின்றன.இதனை நகர்ப்புற மக்களின் நலனுக்காகவும் நகரின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.

இதிலிருந்து மீதப்படுத்தப்படும் பணத்தை சபையின் வருவாய் மற்றும் செல்வீனகள் தலைப்புகளில் இருந்து மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் செய்யும் அர்ப்பணிப்பு நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கத் உதவியாக இருக்கும். இது நகரத்தின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு ஒரு வலுவான முன்மாதிரியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *