தொடரை தீர்மானிக்கும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும், இறுதியுமான போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.
இலங்கைக்கு மூவகை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்ற இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:0 என இலங்கை கைப்பற்றியிருந்தது. பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இவ்விரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி கொண்டு தொடரை 1:1 என சவாலாக்கியுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று (8) பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறுகின்றது. இதன் நாணயச்சுழற்சி வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தை தெர்வு செய்துள்ளது. அதற்கமைய கடந்த 2ஆவது போட்டியில் பங்கேற்ற அதே பதினொரு வீரர்களே இலங்கை அணி சார்பில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பங்களாதேஷ் அணி சார்பில் 2ஆவது போட்டியில் பங்கேற்ற ஹசன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டஸ்கின் அஹமட் இணைக்கப்பட்டுள்ளார்.
(அரபாத் பஹர்தீன்)