சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 வருட நிறைவு நிகழ்வு
இலங்கையில் வறுமை ஒழிப்புத் திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அதிகார சபையின் (சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம்) 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு பூராகவும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் 2025.07.08 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை மற்றும் மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்பும் சம்மாந்துறை மத்திய கல்லூரியில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் தலைமையில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தா் மேலும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.டி.எம்.ஜனூபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







(இஸட்.ஏ.ஏ.றஹ்மான்)