உள்நாடு

கல்வி மேம்பாட்டுக்கான சிறந்த முயற்சி

MUGP INTERNATIONAL ORGANIZATION நிறுவனம் V&D TECH நிறுவனத்தின் அணுசரணையுடன் இலவச LAPTOP வழங்கல் நிகழ்வு

MUGP International Organization அமைப்பினால் V&D Tech நிறுவனத்தின் அணுசரணையில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பான சமூக சேவை முயற்சியாக, கல்வியில் சிறந்த முன்னேற்றம் காட்டிய மாணவ மாணவிகளுக்கு இலவசமாக 25 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு 2025 ஜூலை 3ஆம் திகதி கேஸ்பேவ ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த அரிய முயற்சி திரு வஜிர பிரேமரத்ன V&D Tech மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து வழங்கிய அன்பளிப்பாக அமைந்தது. இவர்கள் எதிர்கால தலைமுறையின் கல்வி வளர்ச்சிக்காக செலவழித்த உன்னத எண்ணம், சமுதாயத்தில் பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது.

மட்டுமன்றி, இந்த மாணவர்களுக்கு இரண்டு வருட காலத்திற்கு முழுமையாக இலவச ZOOM வகுப்புகள் நடத்தப்படும். இதில் தகவல் தொழில்நுட்பம் (IT), ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். இதன் முக்கிய நோக்கம், இளைய தலைமுறையினரை அறிவுத் திறமைகளுடன் கூடிய எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதாகும்.

மேலும், அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன, மத பேதமின்றி இந்த திட்டத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டதை ஊடாக MUGP International தனது சமூக சமத்துவக் கொள்கையை மீண்டும் நிரூபித்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய MUGP International நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு மாதவ நிரோஷன் மற்றும் மதிப்பீட்டு பணிப்பாளர் திரு மஃபாஸ் மஷ்ஹூர் கூறியதாவது:

“இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தங்களின் வளங்களை கேளிக்கைகளில் செலவழிக்கும் காலத்தில், திரு பிரேமரத்னே மற்றும் அவரது குடும்பம் கல்வியில் முதலீடு செய்வதை பார்ப்பது ஒரு ஊக்கமான விஷயமாகும். இந்த திட்டம் திறமையான இந்த மாணவர்களை திறமையான, தன்னம்பிக்கையுள்ள மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் கொண்ட எதிர்காலத் தலைவர்களாக மாற்ற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

இந்த நிகழ்வு சமூக சேவையில் ஒரு புதிய வழிகாட்டியாக அமைந்து, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளம் தலைமுறையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கும் என்பது உறுதி.

முடிவில், MUGP International மற்றும் V&D Tech நிறுவன அணுசரணையுடன் மேற்கொண்ட இந்த செயல், இலங்கையின் எதிர்காலத்திற்கு ஒளிமிளிரும் வழியினை உருவாக்கும் முக்கியமான படியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *