உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையின் முதல் சுற்று இணக்கப்பாடின்றி முடிவடைந்தது

பாலஸ்தீன வட்டாரங்களின் தகவல்களின்படி, யுத்த நிறுத்தம் தொடர்பான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்தது.

கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதல் சுற்று யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் முடிவடைந்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் திங்களன்று (07) தெரிவித்தன.

‘தோஹாவில் நடந்த மறைமுக (எம்.ஐ.அப்துல் நஸார்)பேச்சுவார்த்தைகளின் முதல் அமர்வுக்கு பின்னர், இஸ்ரேலிய பிரதிநிதிகளின் குழுவிற்கு ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு போதுமான அதிகாரம் இல்லை, ஏனெனில் அதற்கு உண்மையான அதிகாரங்கள் இல்லை’ என அந்த வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

பேச்சுவார்த்தை இரண்டு வெவ்வேறு கட்டிடங்களில் நடந்ததாகவும், சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்ததாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

கட்டார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பினரும் தொடர்பு கொண்டனர், ஆனால் எந்த பலனும் இல்லை. திங்கட்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை நடந்த கூட்டத்திற்கு பின்னர் காஸாவின் நிலைமை தொடர்பில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ‘கடுமையான கவலையை’ தெரிவித்தனர்.

‘காஸா மீதான தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாலும், மனிதாபிமான உதவிகள் அந்தப் பகுதிக்குள் நுழைவதைத் தடுப்பதாலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் நிலவும் நிலைமை குறித்து நாங்கள் மீண்டும் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்’ என அவர்கள் கூறினர்.

சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், உடனடி போர்நிறுத்தத்தை ஊக்குவிப்பதற்கும், காஸாவிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்களை மீளப் பெறுமாறும்;, அனைத்து கைதிகள் மற்றும் பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறும் மேற்படி அமைப்பு தெரிவித்திருந்தது.

ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்களுக்கான தனது பதிலை ‘நேர்மறையானது’ எனத் தெரிவித்துள்ளதோடு உடனடி பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தியிருந்தது. மார்ச் மாதத்தில் இறுதியாக போர் நிறுத்தம் முடிவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு முறையான காஸா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் உதவி விநியோகத்தை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஐ.அப்துல் நஸார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *