உள்நாடு

ஆர்.ஜே மீடியா வலையமைப்பின் ஊடகப்பயிற்சி நெறி

ஆர்.ஜே மீடியா ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்துச்சரம் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் வழங்கும் மூன்று மாத கால ஊடகப் பயிற்சி நெறியானது பதினைந்து அமர்வுகளாக சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது .

இக்கற்கை நெறியின் இறுதியில் வழங்கப்படும் வானொலி நேரடி பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சி ஏழாம் மற்றும் எட்டாம் குழுவை மையப்படுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை ஊடகப் பயிற்சி நிலையத்தில் (6) இடம்பெற்றது

இதன் போது செய்தி வாசிப்பு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பு, வானொலி நேரடி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக ஆர்.ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான ஏ.எம் இன்ஷாப் கலந்து கொண்டதோடு, விசேட அதிதிகளாக அறிவிப்பாளரும் வளவாளருமான கே.எம்.எம் சர்ஜதீன், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன கொத்மலை ஊடக கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளர் கபில குமார அரத்தன, ஆர்.ஜே மீடியா வலையமைப்பின் பிரதிச் செயலாளர் சபீயா பைசல், ஆர்.ஜே மீடியாவின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமையா சுகைப் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *