அநுராதபுர ஆஸ்பத்திரி கழிவுகள் குறித்து மகா சங்கத்தினர் அதிகாரிகள் ஆராய்வு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் மருந்துக் கழிவுகளை முறையாக நிர்வாகிக்காதலால் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வடமத்திய மாகாணத்திலுள்ள பெரிய வைத்தியசாலையாகும்.இந்த வைத்தியசாலையில் தினமும் கிட்டத்தட்ட ஆயிரம் வெளிநோயாளர்களும் ஏராளமான உள்நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் மருந்துக் கழிவுகள் மழைகாலங்களில் வைத்தியசாலையில் உள்ள பல்டோருவா அருகே கொட்டப் படுவதால் கழிவுகள் தண்ணீருடன் அருகிலுள்ள குடியிருப்புக்களில் செல்கின்றன.இதனால் அவர்கள் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் இது தொடர்பாக எடுக்கப்படக் கூடிய சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மகா சங்கத்தினர் அநுராதபுரம் மாநகர சபையின் மேயர் என்.கருநாரத்ன மற்றும் குழுவினர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் அடுக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியைப் பார்வையிட்டனர்.




(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)