பெருகமலை ஸாகிரீன் மத்ரஸாவில் முஹர்ரம் தின விழா
பேருவலை சீனங் கோட்டை பெருகமலை ஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸாவில் முஹர்ரம் தின விழா 2025/07/05 சனிக்கிழமை காலை அதிபர் எஸ்.எச்.எம் இம்ரான் (ஹூமைதி), உப அதிபர் லியாஉல் ஹக்(பாரி) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
குர்ஆன் மத்ரஸா சிறார்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் இதன் போது மேடையேற்றப்பட்டடோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினரும், சீனங் கோட்டை பள்ளிச் சங்கத்தின் இணைச்செயளாளரும்மான கலீபாதுஷ் ஷாதுலி அஷ் செய்க் அல் ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) ஸாக்கிரீன் ஜும்மா பள்ளிவாசல் உப நிர்வாக குழு அங்கத்தவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல் ஹாஜ் பீ.எம். முக்தார் மற்றும் சீனங் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் சிரேஷ்ட உறுப்பினர் அல் ஹாஜ் அஹ்லஸ் தாஜுத்தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினரும், சீனங் கோட்டை பள்ளிச் சங்கத்தின் இணைச்செயளாளரும் கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் ( நளீமி ) உரையாற்றும் போது-ஸாக்கிரீன் மத்ரஸா வில் முஹர்ரம் புது வருட நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
மாணவர்களுக்கு உலமாக்களால்சிறந்த முறையில் பயிற்ச்சியளிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய மத்ரஸா க்களுக்கு முன்னுதாரனம்மாகும்.
இங்குமேடையில் அரங்கேற்றபட்ட மாணவர்களின் நிகழ்ச்சிகளை அவர் பாராட்டியதோடு சிறார்களின் திறமைகளையும், ஆற்றல்களை மேலும் வளர்க்க சிறந்த பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றார். எதிர் காலத்தில் இதை விட சிறப்பாக திறமையாக நடை பெறுவதற்கு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
சிறார்கள் புனித அல் குர்ஆனையும், மார்க்க விடயங்களை சிறப்பாக கற்று உலமாக்களையும், பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்து நடந்து நல்ல ஒழுக்க பண்பாடுகளோடு வாழ்ந்து சமூகத்துக்கும், நாட்டுக்கும் சிறந்த பிரஜையாக வாழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.







(பேருவலை நிருபர் பீ. எம். முக்தார்)