குவைத் நிதியுதவியில் பொல்கஹவெல அல் இர்பானில் இரு மாடிக் கட்டடம் திறந்து வைப்பு
குருநாகல், பொல்காவலை அல்-இர்பான் மத்திய கல்லுாரிக்கு குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 8 வகுப்பறைகளைக் கொண்டு நிர்மாணிக்க்ப்பட்ட புதிய இரண்டு மாடிக் கட்டிடம் 06.07.2025 சம்பிரதாயபூர்வமாக ஊர் மக்களின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகள் கல்லுாரி அதிபர் அஸ்மி ஜவர்சாஹ் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் மெளபர் குருநாகல் மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம், குவைத் தூதரகத்தின் அதிகாரி அஷ்ஷேக் எம்.பிர்தௌஸி (நளிமி) அல் ஹிமா இஸ்லாமிய சேவை அமைப்பின் செயலாளரும், குவைத்திட்டத்தின் செயற்பாட்டாளருமான அஷ் ஷேக் நூறுல்லாஹ் (நளிமி) மற்றும் பொல்காவலை பிரதேச சபைத் தலைவர், மற்றும் சபை உறுப்பிணர்கள், பழைய மாணவ சங்கத்தின் உறுப்பிணர்கள் , பாடசாலையின் அபிவிருத்திச் சபையின் உறுப்பிணர்கள் பெற்றார்கள் ஆசிரியர்கள்,மாணவர்கள் குருநாகல் வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எம். சலாஹூதீன், அல்ஹிமா பணிப்பாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்தனர்.










(அஷ்ரப் ஏ சமத்)