வாகரையில் குளத்தில் மூழ்கி 10, 11 வயதான 3 சிறுவர்கள் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று (06) மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதான 2 சிறுமிகளும் 10 வயதான ஒரு சிறுவனுமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது
மேலதிக செய்தி இணைப்பு
மட்டக்களப்பு, வாகரை, கருவப்பங்கேணி பகுதியில் குளத்திற்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
மரணமடைந்த மூவரில் இரண்டு சிறுமிகளும் உள்ளடங்குவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாகரைப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச்.சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
