ரைத்தலாவெல ஜும்ஆ பள்ளியில் ஒலிபெருக்கியில் அதான் கூற தடை விதித்த பொலிசார்.மேலிடத்து உத்தரவையடுத்து மீண்டும் அனுமதி
மாத்தளை மாவட்டத்திலமைந்துள்ள உக்குவளை ரைத்தலாவெல ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதான் கூற மாத்தளை பொலீசார் தடைவிதித்து பின் மீண்டும் அனுமதியளித்த சம்பவமொன்று அன்மையில் இடம்பெற்றுள்ளது
இதுவிடயம் குறித்து அறியவருவதாவது பிரதேசத்தில் குறிப்பிட்ட பள்ளிவாசலின் ஒலிபெருக்கியில் அதிக ஓசையில் அதான் கூறுவதில் தமக்கு இடைஞ்சலாகவிருப்பதாக ஒருசிலர் அவசர பொலீஸ் பிரிவுக்குக் கொடுத்த முறைப்பாட்டையடுத்து மாத்தளை பொலீசார் பள்ளிவாசல் நிர்வாகிகளை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்து தமது நிலையத்துக்கு அதான் குறித்து புகார் கிடைத்துள்ளதால் அதான் கூறுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் பொலீஸ் கட்டளை சட்டத்தின்படி தமக்கு இத்தடை விதிப்புக்கு அதிகாரமிருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்
இந்நிலைமையையடுத்து பிரதேச முஸ்லிம்களுக்கிடையில் சலசலப்பும் கவலையும் ஏற்பட்டிருந்தது
நிர்வாகிகளால் அதானுக்கான தடையை நீக்கக்கோரி நியாயமாக பொலீசாருக்கு எடுத்துக்கூறப்பட்டிருந்தது அடுத்து பிரதேச அரசியல் பிரமுகர்களது கவனத்துக்கும் இதனை நிர்வாகிகள் கொண்டுவந்ததையடுத்து மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவுக்கமைய மீண்டும் இப்பள்ளிவாசல் ஒலிபெருக்கியில்ச அதான் சொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
(உக்குவெலை ஜெலீல்)