பேருவளை யூத் லீக் இறுதிப் போட்டியில் பர்பரீன் அணி சாம்பியன்.

ஸூஹைர் ஹஜ் ட்ரவல்ஸ் இன் அனுசரனையுடன் பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட Youth league championship 2025 உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி (05/07/2025) தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது,
பேருவளை பகுதியை சேர்ந்த 16 உதைப்பந்தாட்ட அணிகள் பங்குப்பர்ரியமை குறிப்பிடத்தக்கது
பேருவலை பாபரீன் உதைப்பந்தாட்ட அணியும்,தர்காநகர் லிவர்பூல் உதைப்பந்தாட்ட அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.
இறுதிப்போட்டியில் இரு அணிகலும் 1-1 என்ற கோலை பெற்றுக்கொண்டபின்னர் பின்னர் பெனால்டி முரையில் லிவர்ப்பூல் அணி 3 கோல்கலையும் , பார்ப்பரீன் அணி 5 கோல்கலையும் பெற்றதோடு பார்பரீன் அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
பரிசலிப்பு விழா சங்கத்தலைவர் றிஸ்வான் ஹாஜியார் தலைமையில் நடைப்பெற்றதோடு, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்தி குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.ஸுஹைர் ஹஜ் ட்றவல்ஸ் உரிமையாளர் ஏ.பீ.எம்.ஸுஹைர் ஹாஜியார், முன்னாள் எம்.பீ.அஸ்லம் ஹாஜியிர், டாக்டர் ரூமி ஹாஷிம், முன்னாள் அதிபர் எம்.இசட்.எம்.நயீம்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.கே.ரத்ன ஸிங்கம்,அதிபர் எம்.இசட்.எம்.வசீர், களுத்துறை மாநகர சபை உறுப்பிணர் அன்வர் சர்தார்,உதைப்பந்திட்ட சங்க முன்னாள் தலைவர் பதீ ஹாஜியார்,big city உரிமையாளர் இஜிலான் யூஸுப் ஹாஜியார் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)