சமூகம் தமது தரவுகளை மறந்தால் இழப்புக்களை தடுக்க முடியாது -சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” ; ஒரு சாமானியனின் பார்வையில்
அக்கரைப்பற்ரினை சேர்ந்த இளம் ஆய்வாளரும்,சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும். சாட்சியாகும் உயிர்கள். எம்.எச்.எம்.அஷ்ரப் மரணம் என்ற 3 நூல்களின் வெளியீடு அண்மையில் அக்கறைப்பற்றில் இடம் பெற்றது.
சிரேஸ்ட ஒலி மற்றும் ஒளி பரப்பாளரும், சட்டத்தரணியுமான ஏ. எம். தாஜ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றில் மிகவும் காலத்தின் பதிவாகும்.
மூன்று அரங்குகளாக பிரிக்கப்பட்டு முதல் அரங்கு எம். எச். எம். அஷ்ரப் அரங்கில் “எம். எச்ச. எம். அஷ்ரபின் மரணம்” என்ற நூலின் ஆய்வு சட்டத்தரணி எம். எம். பஹீஜினால் செய்யப்பட்டது.
இரண்டாவது அரங்கு எம். ஐ. எம். முகைதீன் என்று பெயர் குறிப்பிடப்பட்டு “சாட்சியமாகும் உயிர்கள் ” என்னும் நூலினை எம். பி. எம். பிர்தெளஸ் ( நளீமி) ஆய்வு செய்தார்.
மூன்றாம் அரங்கு எம். எச். சேகு இஸ்ஸதீன் அரங்கில் “ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” என்னும் நூலின் ஆய்வினை வண. பிதா. ராஜன் ரொஹான் மற்றும் பேராசிரியர் எம். எம். பாசில் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்களான ரிஷாட் பதியுதீன், ஏ. எல். எம். அதாவுல்லா ஆகியோரும், பிரதேச செயலாளர் அன்சார் அவர்களின் பிரசன்னமும் இங்கு இருந்தது.
இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டவன் என்ற வகையில், இதனது ஆழமும், அகலமும் எங்கு நீண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாதுள்ளது.அந்த அளவுக்கு இந்த 3 நூல்களும் தேடல்களுக்கு வித்துட்டுள்ளது.
பொதுவாக நூல் வெளியீட்டு நிகழ்வுகள் வெறுமனே அதி திகளை திருப்தி படுத்தும் ஒன்றாகவே இருப்பதையே அதிகமான நிகழ்வுகளில் கண்டுள்ளோம்.
ஆனால் இது உச்சம் திட்ட நிகழ்வு என குறிப்பிடுவது பொருத்தமாகும். இந்த மூன்றில் ஒன்றான ஈஸ்டர் தொடர்பிலான நூல் வெளிவராமல் போகலாம் என்ற அச்சம் நூலாசிரியருக்கும், நிகழ்வின் ஏற்ப்பாட்டர்களுக்கும் இருந்துள்ளது.
இதற்கும் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
நூல் ஒன்றிணை வெளியிடுவது இலேசான விடயம் என்பது உண்மை. அது வாயினால் சொல்பவர்களுக்கு மட்டும். ஆனால் இந்த நூல் அதிகார ஆட்சிக்கதிரைகளுக்கு அச்சத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது யதார்த்தம்.
இனி சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்” என்ற நூல், இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் திகதி நிகழ்ந்த ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி, நீதிமுறை நடவடிக்கைகள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்து விரிவான ஆய்வை வழங்குகிறது.
இந்த நூல், ஈஸ்டர் தாக்குதல்களின் சமூக, இன, மத சார்ந்த பல்வேறு பரிமாணங்களை பன்முகமாக ஆராய்ந்து, தாக்குதலுக்கான காரணங்கள், தாக்குதலின் விளைவுகள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்ட சவால்களை வெளிப்படுத்துகிறது.
நூலின் முக்கிய அம்சங்கள்களாக பன்முக ஆய்வு என்கின்ற அம்சமே இதில் முன்னுரிமைப்படும் விடயமாகும்.சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சமூகங்களின் பார்வையில் தாக்குதல்களின் பின்னணி வெவ்வேறு பார்வையாகவே காணப்படுகிப்படுகின்றது.
இம் மூன்று சமூகங்களும் ஆக குறைந்தது ஒரே மய்யப் புள்ளியில் சங்கமம் ஆக முடியாது போனாலும், முற்றாலும், மோதலும் இல்லாத அருகருகில் செல்லும் தண்டவாளம் போன்று இருந்தாலே பல்வேறு விடயங்களை சாதிக்கலாம் என்ற விதைப்பின்ப்பின் அவசியமே ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும் என்கின்ற நூலின் தாரக மந்திரம் என்று சொல்வதில் கருத்து முரண்பாடுகள் இருக்காது என்பது சரியாகும் என்று நினைக்கின்றேன்.
ஈஸ்டர் தாக்குதலால் ஏற்பட்ட சமூக நெருக்கடிகள் மற்றும் சமுதாய ஒற்றுமைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம், இந்த சம்பவம் பற்றி கிடைக்கும் தக வல்களும், கதையாடல்களின் நம்பகத்தன்மை பற்றி நாம் தெரியவேண்டும் என்றால் ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும் என்கின்ற புதுப்பிக்கப்பட்ட ஷர்ஜூன் அவர்களின் இந்த நூல் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு அப்பால் இது தொடர்பில் காணப்படும் சர்ச்சைகள் மற்றும் உண்மைகள் பற்றிய அறிவு நிச்சயம் ஒவ்வொரு வரிடத்திலும் இருப்பது இந்த நூலை முன்னோக்கி நகர்த்த அவசியமாகும்.
தாக்குதலின் பின்னணி மற்றும் சம்பவங்கள் தொடர்பான வெளிவராத உண்மைகள், சர்ச்சைகள் பற்றிய பகுப்பாய்வினை சர்ஜூன் ஜமால்தீன் “ஈஸ்டர் தாக்குதல்கள்” நூலின் முக்கியமான அம்சங்களாக கட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி: 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தாக்குதல்களின் சமூக, மத, மற்றும் அரசியல் காரணங்களை விரிவாக இந்த நூல் ஆராய்கிறது.
அதே போல் ஈஸ்டர் தாக்குதலுக்குப்பின் நடந்த விசாரணைகள், நீதிமுறை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விரிவான விளக்கம் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு ல்லாமை தேடலுக்கு மேலும் வலுவூட்டுவனாவக காணாப்படுகின்றது.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட சமூக நெருக்கடிகள், சமுதாய ஒற்றுமைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து மீட்பு முயற்சிகள் பற்றிய பல தரவுகள் ஒரு ஆவணப்படுத்தலாக வந்துவிட்டது என்ற செய்தி இது தொடர்பில் இன்னும் சட்ட நகர்த்தலுக்கு துணை நிர்க்கும் என்பதில் சந்தேகமமுமில்லை.
இதில் நூலசியரின் பன்முக பார்வை ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமியர், சிங்களவர், தமிழர், ஆகிய சமூகங்களின் பார்வையில் இந்த தாக்குதல்களின் விளைவுகளை பகுப்பாய்வு செய்த ஒரு பெறுமதி வாய்ந்த நூல் என்பதற்கான ஆதாரமாகும்.
தாக்குதலின் பின்னணி மற்றும் சம்பவங்கள் தொடர்பான வெளிப்படாத உண்மைகள் மற்றும் சர்ச்சைகளை இந்த நூலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அம்சங்கள் மூலம், நூல் ஈஸ்டர் தாக்குதல்களின் முழுமையான படிமத்தை சமூக மற்றும் சட்ட ரீதியாக ஆராயும் முக்கியமான ஆய்வாகும். அதே போல் இணைக்கப்பட்ட ஒன்றாக தற்றுப்போதய்ய அரசியல் தொடர்பு பற்றி அவரது தேடலை “ஈஸ்டர் தாக்குதல்கள்” நூலில் உள்ள சமூக மற்றும் அரசியல் விமர்சனங்கள் முக்கியமாக பின்வருமாறு முன்னிலைப்படுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் இலங்கையின் பல மத மற்றும் இனக் குழுக்களிடையே உள்ள நெருக்கடிகளையும், சமூக ஒற்றுமை இல்லாமையையும் வெளிப்படுத்தின.
இந்த நூல் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சமூக பாகுபாடுகள், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவுபோக்களையும் தூக்கிபிடிக்கும் கலாசாரம் பற்றியும் இங்கு நூலாசிரியர் விட்டு வைக்க வில்லை.
அரசியல் மேலாண்மை மற்றும் அதிகாரம், சமூக மேலாண்மை மற்றும் அரசியல் அதிகாரம் எப்படி சில ஆட்சியாளர்களால் கருத்தியல் மற்றும் பண்பாட்டு கருவிகளின் மூலம் பராமரிக்கப்படுகிறது என்பதை கிராம்சியின் ‘மேலாண்மை’ (Hegemony) கோட்பாடுகளின் மூலம் விளக்குகிறது.
இதன் மூலம், தாக்குதலுக்கு பின்னால் உள்ள அரசியல் மற்றும் சமூக வலையமைப்புகளின் தாக்கம் இந்த நூலில் ஆராயப்படுகின்றமை நூலாசிரியாரின் அகன்ற தேடலின் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது
இலங்கையின் சமூக அடுக்கமைவு மற்றும் வர்க்க மோதல்கள் தாக்குதலுக்கு ஒரு காரணமாகவும், அதன் விளைவாகவும் விவாதிக்கப்படுகிறது என்ற விடயத்தை சொல்லும் வேளை குறிப்பாக, வர்க்க அடிப்படையிலான சமுதாய அசமத்துவங்கள் மற்றும் அரசியல் அதிகாரப் பிரிவுகள் தாக்குதல்களின் சமூக சூழலை உருவாக்கியுள்ளதாக ஈஸ்டர் தாக்குதளின் பின்னர் பரவலாக பேசப்பட்ட விடயங்களாக ஷர்ஜுன் இந்த நூலில் குறிப்பிட்டு காட்டியுள்ளார்
இதே வேளை அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நீதிமுறை, தாக்குதலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள், விசாரணைகள் மற்றும் தண்டனைகள் குறித்து நூல் விமர்சனமாக அணுகுகிறது.
அரசியல் அதிகாரம் சில சமயங்களில் குற்றவாளிகளை பாதுகாத்து, சமூக நியாயத்துக்கு இடையூறு செய்யும் நிலைமைகளும் இல்லாமல் இல்லை என்பதையும் இதில் குறிப்பிடுகிறது.
சிவில் சமூகம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் சமூகத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிரஜைகள் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைந்து எதிர்ப்பியக்கத்தை உருவாக்கும் முக்கியத்துவத்தை இந்த நூலி ல் வலியுறுத்துகின்றமை எதார்த்தமாகவே இருக்கின்றது.
இதன் மூலம், நூல் ஈஸ்டர் தாக்குதல்களின் சமூக மற்றும் அரசியல் பரிமாணங்களை
ஆழமாக விமர்சித்து, இலங்கையின் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் நிலவரங்களில் உள்ள அடிக்கடி மறைக்கப்படும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.
இந்த நூலில் சிவில் சமூக அமைப்புகளின் அரசியல் பங்கினையும் அவர் விளக்கியுள்ளார்.
சிவில் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக செயல்படுகின்றன: இவை கட்சி சாரா அரசியல் அமைப்புகளாக (Non-party Political Formations) இருந்து, அரசியல் அதிகாரம் (Political Power) கைப்பற்றுவதே நோக்கம் அல்ல;
ஆனால் பொதுப் பிரச்சினைகள், மனித உரிமைகள், சமூக நீதி போன்ற விடயங்களில் அரசியல் செயற்பாட்டை (Political Activism) முன்னெடுக்கின்றன.
அரசியல் மேலாண்மைக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தை உருவாக்குகின்றன.
ஜனநாயக அரசியலில் புதிய வாய்ப்புகளைத் திறக்கின்றன: அரசியல் கட்சிகளுக்கு இல்லாத இடைவெளிகளில் பிரஜைகளின் அரசியல் பங்கேற்பை ஊக்குவித்து, ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் பங்கு வகிக்கின்றன.
சிவில் சமூக அமைப்புகள் அரசியல் சமூகத்திலிருந்து சுதந்திரமான வெளி (Autonomous Political Space) ஆக செயல்படுகின்றன; இதனால் அரசியல் சமூகத்தின் மேலாண்மை சிவில் சமூகத்தின் மீது நிறுவப்படாமல், அதன் தனித்துவமான குரல் நிலைத்து நிற்கிறது.
அரசியல் சமூகத்தின் மீது அழுத்தங்கள் இருந்தாலும், சிவில் சமூக அமைப்புகள் சமூக நன்மைக்காக செயல்படுகின்றன: அரசியல் சமூகத்தின் மேலாண்மைக்குள் சிக்காமல், பொதுப் பிரச்சினைகளை முன்வைத்து மக்களை அரசியல் அணிதிரட்டல் (Political Mobilisation) செய்யும் திறன் கொண்டவை என்பதினை இந்த நூல் எடுத்து கூறுகின்றது.
சிவில் சமூகம் என்பது அரசு என்ற நிறுவனத்திற்கு வெளியே சமூக வெளியில் சுயாதீனமாக (Autonomous) இயங்கும் அமைப்புகளின் தொகுப்பு ஆகும். இது பொதுமக்கள் தங்களது பொதுவான தேவைகள், நலன்களை அடைவதற்காக உருவாக்கும் சங்கங்கள், கழகங்கள், கூட்டமைப்புகள் போன்றவை.
ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கான வெளியாக சிவில் சமூகம் மக்களின் கூட்டு நலன்களை (Collective Interests) அடைய உதவும் சமூக இடமாக செயல்படுகிறது.
இது அரசியல் கட்சிகளுக்கு மாற்றாகவும், அரசியல் மேலாண்மைக்கு எதிரான எதிர்ப்பியக்கத்திற்கான இடமாகவும் உள்ளது.
இந்த நிலையில் நூலாசிரியர் ஒரு சட்ட நுனுக்க உத்திகளை கொண்டவர், ஒரு சட்டத்தரணி என்பதால் பொருத்தமான தலைப்பிட்டு தற்போது ஆழமாக பேசப்படுகின்ற ஒரு விடயதானத்தினை கொண்டு வந்துள்ளமை பலருக்கு சவலாகும் என்பதில் சந்தேகமில்லை.
சேலை முள்ளில் விழுந்தாலும், முட்கள் சேலையில் பட்டாலும் சேதம் சேலைக்கு தான். இதனை தாண்டி சேலையினை பாதுகாக்க முட்களுக்கு மேலால் பயணிப்பது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இளம் வயத்தில் முதிர்ச்சிக்கான அனுபவத்து டன் பிரசவித்துள்ள இந்த மூன்று முத்துக்களும் பாதிகாக்கப்பட வேண்டுமெனில், சமூக, அரசியல், பக்க சார்பற்ற அனைவரும் தமது கரங்களை அகல நீட்டுவதுதான் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கும் ஷர்ஜுன் ஜமால்தீனின் ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும் எதிர்பார்க்கும் இலக்கை அடையும்.





(இர்ஷாத் ரஹ்மத்துல்லா)