காஸா தாக்குதல்களைக் கண்டித்து பேருவளையில் ஆர்ப்பாட்டம்..!
இஸ்ரேல் பாலஸ்தீன காஸா மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் சுதந்திர பலஸ்ஸீனுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று 6ம் திகதி பேருவளை நகரில் மாப்பொரும் ஆர்பாட்ட மொன்று இடம்பெற்றது.
பேருவளை மக்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இன,மத,மொழி,கட்சி பேதமின்றி அனைத்து இன மக்களும்,சமய தலைவர்கள்,பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள்,சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களையும் விசேடமாக சிறுவர்களையும் கண்மூடித்தனமாக கொண்று இனச்சுத்தீகரிப்பு செய்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்களை கையில் ஏந்தி மிக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சிறுவர்களும் பெண்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)





