உள்நாடு

ஓட்டமாவடி ஸாஹிராவில் சின்னம் சூட்டும் நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.ஜாபிர் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வகுப்புத் தலைவர்கள், மாணவத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு சின்னங்கள் சூட்டி வைக்கப்பட்டன.

தலைமைத்துவப் பொறுப்புக்கள், பண்பாட்டு பழக்கவழக்கங்களை இளம் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.எல்.நிஜாம்தீன், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபர் ஏ.ருபாய்தீன், ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.எம்.சாதாத், வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.எம்.றமீஸ், கேணி நகர் அல் மதீனா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.நியாஸ், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி உட்பட மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய பேண்ட் வாத்தியக் குழுவினரால் மாணவர்கள், அதிதிகள் அழைத்து வரப்பட்டதோடு, இந்நிகழ்வை அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எச்.எம்.எம்.பர்ஸான் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *