உக்குவளை நகரை அழகு படுத்தும் திட்டம் பிரதேச சபையால் முன்மொழிவு..!
உக்குவளை நகரை அழகுபடுத்தும் திட்டமொன்றைஉக்குவளை பிரதேச சபை முன்மொழிந்துள்ளது
இதுகுறித்து உக்குவளை பிரதேச சபையின் உதவி தலைவராக அன்மையில் தெரிவுசெய்யப்பட்ட எம்.எஸ்.எம். ராபி தெரிவிக்கையில்..
கடந்த 15 ந்திகதி இச்சபைக்குப் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிமல் கருணாதிலக்கவின் தலைமையிலான உறுப்பினர்களுடனான சமீபத்தில் இச்சபையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது உக்குவளை நகரை அழகுபடுத்தும் திட்டம்பற்றி பேசப்பட்டு பின்னர் தலைவர் சகிதம் முக்கிய உறுப்பினர்கள் உக்குவளை நகரில் அழகுபடுத்தப்படவுள்ள இடங்களைப் பார்வையிட்டோம்
அந்தவகையில் நகரில் பிரதான பாதையோரமாக அமைக்கப்பட்டுள்ள வடிகாண்களை சுத்தம் செய்து அவற்றின் மேல் பாதுகாப்புக்காக கொங்கிரீட் அமைத்தல் , ஏற்கனவே நகரின் மத்தியிலிருந்து முழுதும் உடைக்கப்பட்ட பழைய பிரதேச சபைக்
கட்டடம் அமைந்த பகுதியைத் திருத்தி வாடகை முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகனங்களை நிறுத்திவைவைப்பதற்கான இட ஒதுக்கீடு, வசதியான கண்டி மற்றும் மாத்தளை பேரூந்துகள் நிறுத்துமிடங்களை அமைத்தல், வாராந்த சந்தை தொகுதிக்கான பொருத்தமான இடமொன்றந ஏற்படுத்தல், பயணிகள் நலன்கருதி உக்குவளை நகரிலிருந்து கலல்பிட்டி எனும் கிராமமூடாக மாத்தளைக்குச் சென்று வரும் புதிய பேரூந்து சேவையை ஏற்படுத்தல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்
இதற்கான நிதி உக்குவளை பிரதேச சபையில் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியுடன் அருகிலிருந்தால இதற்கான தேவையான நிதி பெறப்படுமெனவும் தெரிவித்தார்.