நைல் நதியில் கட்டப்படும் எத்தியோப்பியாவின் அணைக்கட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி..! -பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
அண்டை நாடுகளை நீண்டகாலமாக கவலையடையச் செய்த பல பில்லியன் டொலர் பெறுமதியான பாரிய அணை தற்போது கட்டி முடிக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது கடந்த வியாழக்கிழமை (03) அறிவித்தார்.
2011 ஆம் ஆண்டு 4 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணை (GERD), ஆபிரிக்காவின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகக் கருதப்படுகிறது, இது 1.8 கிலோமீட்டர் (ஒரு மைலுக்கு சற்று அதிகமான) அகலமும் 145 மீட்டர் (475 அடி) உயரமும் கொண்டது.
பாராளுமன்றத்தில் பேசிய அபி, GERD திட்டம் ‘இதற்போது நிறைவடைந்துள்ளது, அதன் உத்தியோகபூ10ர்வ திறப்பு விழாவிற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.
எத்தியோப்பியா இந்த அணை அதன் மின்மயமாக்கல் திட்டத்திற்கு இன்றியமையாததாகக் கருதியது, ஆனால் அது நீண்ட காலமாக எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுடன் பதட்டங்களுக்குக் காரணமாக இருந்து வருகிறது, அந் நாடுகள் தமது நீர் விநியோகத்தை இந்த அணை பாதிக்கும் என அந் நாடுகள் கவலை கொண்டுள்ளன.
‘எங்கள் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் சூடானுக்கு எமது செய்தி என்வென்றால் இந்த அணை ஒரு அச்சுறுத்தல் அல்ல, இது எல்லோருக்குமான வாய்ப்பு,’ என அவர் மேலும் தெரிவித்தார்.
‘இதனால் உருவாக்கப்படும் மிக்சக்தியும் ஏனைய ஆற்றல்களும் எத்தியோப்பியாவின் அபிவிருத்திக்கு மட்டுமல்ல, அதன் மேம்பாடடிற்கும் உதவும்’ என அபி தெரிவித்தார்.
எத்தியோப்பியா முதன்முதலில் கடந்த 2022 பெப்ரவரி மாதத்தில் சூடானின் எல்லையிலிருந்து 30 கிமீ தொலைவில் நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள இந்த திட்டத்தில் மின்சார உற்பத்தியைத் ஆரம்பித்தது.
இந்த பாரிய அணையின் முழு கொள்ளளவில் 74 பில்லியன் கன மீட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் அத்துடன்; 5,000 மெகாவாட்டுக்கும் மேற்பட்ட மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.
(எம்.ஐ.அப்துல் நஸார்)