கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்..!
சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளரின் ஒன்றுகூடலை நடத்துவது தொடர்பாகவும் –
AI, அதாவது செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த நவீன ஊடகத்துறையில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் –
ஆராயும் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இன்று (05.07.2025) காலை 10.15 மணிக்கு பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் பொருளாளர் ரிஸ்வான் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். நிலாம், சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர், செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகியோர் உட்பட பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் பல உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போருதொட்ட ‘அல்-பலாஹ்’ கல்லூரியில் காலை முதல் மாலை வரை இந்த இரு நிகழ்வுகளையும் நடத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த இரு நிகழ்வுகளையும் சிறப்பாக நடாத்திமுடிக்க உரியவர்களுக்கு பொறுப்புக்கள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

