இர்ஹாம் ஹைதர் முயற்சியில் சுற்றாடல் பிரச்சினைக்குத் தீர்வு.

அளுத்கம மத்துகமை வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள பிரதான வடிகால்கள் நீண்ட காலமாக சுத்தம் செய்யப் படாமல் இருந்ததால் வடிகால் கள் கழிவுகளும் மண்ணும் நிரம்பி மழைநீர் வடிந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
இதனால்மழை காலத்தில் தர்கா நகர் பிரதேசம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றமை பற்றி வீதி அபிவிருத்தி அதிகார சபையோ உள்ளூராட்சி மன்ற நிர்வாகிகளோ எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தர்கா நகர் பிரதேச சமூக ஆர்வலரும் பல சமூக நல இயக்ககங்களின் உறுப்பினருமான ஜனாப் இர்ஹாம் ஹைதர் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியின் செயலாளர், மேல் மாகாண ஆளுநர் அவர்களுடனும் மற்றும். அவரது இணைப்புச் செயலாளர் அவர்களுடனும் தொடர்பு கொண்டு தொடர்ந்து எடுத்த முயற்சியின் காரணமாக நீண்டகால சுற்றாடல் பிரச்சினை ஒன்று தீர்க்கப் பட்டு வருகிறது.
இதற்காக இலை மறை காயாக நின்று செயற்பட்டு வரும் ஜனாப் இர்ஹாம் ஹைதர் அவர்கள் பிரதேச மக்களின் பாராட்டுக்கு உரியவராவதோடு இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வழிவகுத்த ஜனாதிபதியின் செயலாளர், மேல் மாகாண ஆளுநர் அவர்களுக்கும் மற்றும் அவரது இணைப்புச் செயலாளர் அவர்களுக்கும் பிரதேச மக்கள் தங்கள் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)