இலங்கைக்கான சவூதி தூதுவருக்கும், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் திரு. இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் திரு. எம். ஷிஹாம் மரிக்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (3) இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
(எஸ். சினீஸ் கான்)