மலேஷியாவில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அரபாத் கரீமுக்கு சீனன்கோட்டை தேசிய பாடசாலையில் கெளரவம்
பேருவளை சீனன்கோட்டை தேசிய பாடசாலையில் முஹர்ரம் 1447 இஸ்லாமிய புது வருட நிகழ்வும் மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற பாடசாலை பழைய மாணவரும் ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அஷ் செய்க் அரபாத் கரீம் (நளீமி – பீ.எச்.டி.)யை கௌரவிக்கும் வைபவமும் பாடசாலை மர்ஹூம் எஸ்.எம்.ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அதிபர் எம்.ஸி.இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை அஸ்விருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பலரும் பங்கு பெற்றினர்.
ஹிஜ்ரி 1447 புது வருட (முஹர்ரத்தின்) சிறப்பு பற்றி கலாநிதி அரபாத் கரீம் (நளீமி)விசேட சொற்பொழிவாற்றினார்.
தான் கல்வி கற்ற பாடசாலையில் கலாநிதி பட்டம் பெற்றமைக்கு கௌரவிப்பு நிகழ்வொன்றை நடாத்தியமை குறித்தும் அவர் நன்றி தெரிவித்தார்.
அதிபர் எம்.ஸி.இப்ராஹிம் உட்பட பலரும் இங்கு பேசினர்.



(பேருவளை பீ.எம்.முக்தார்)