ஓய்வு பெற்றுச் செல்லும் அல் ஹுமைஸரா அதிபர் இப்ராஹிமுக்கு சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமம் பாராட்டு..!
பேருவளை சீனன்கோட்டை அல்- ஹுமைஸரா தேசிய பாடசாலையின் அதிபராக இரு வருட காலம் பணி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் முஹம்மத் காஸிம் இப்ராஹிம் ( 01.07.2025) இரவு சீனன் கோட்டை முத்துக்கள் வட்ஸப் குழுமத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
நளீம் ஹாஜியார் மாவத்தையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தலைமை வகித்தார்.
சீனன் கோட்டை ஸகாத் பவுண்டேசன் தலைவரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க மூத்த உறுப்பினருமான எம்.ஐ.எம் பாக்கிர் ஹாஜியார், பாடசாலை அபிவிருத்திச் சங்க சிரேஷ்ட உருப்பினர் எம்.எப்.எம் ஹாரூன் ஹாஜியார், முத்துக்கள் வட்ஸப் குழுமத்தின் ஒருங்கினைப்பாளர்களான பிரபல மாணிக்க வருத்தகரும் சமூக சேவையாளருமான அல் ஹாஜ் சபீக் காஸிம்,ருசான் மற்றும் பஹாம் உட்பட உருப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கு பற்றினர்.
ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் எம்.ஸி இப்ராஹிம் குறுகிய காலத்தில் அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையை கட்டியெழுப்ப மேற்கொண்ட முயற்சிகளையும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த செய்த தியாகங்களையும் இங்கு பலரும் பாராட்டி பேசினர்.
இறுதியில் அதிபர் எம்.ஸி இப்ராஹிம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சீனன் கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமம் பிரதேச பாடசாலைகளில் வரிய மாணவர்களுக்கு பாதணி, புத்தகப் பை வழங்கியும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகளை நடாத்தியும் மைற்கொள்ளும் பணிகளை ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் இப்ராஹிம் பெரிதும் பாராட்டினார்
(பேருவளை பீ.எம். முக்தார்)



