உள்நாடு

“இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்..! -கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பைத்துல்மால் நிதியம்’ என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் இவ்வாறதொரு நிதியத்தினை இலங்கையில் ஆரம்பிப்போமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

(எஸ். சினீஸ் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *