புத்தளம் பாலாவி உப்பு கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புத்தளம் பாலாவி உப்பு கூட்டு த்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு கோரிக்கை முன்வைத்து புதன்கிழமை (02)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய வாழ்க்கை செலவுக்கு ஏற்றார் போல கொடுப்பனவுகள் போதுமானது இல்லை என்றும் அவற்றை அதிகரித்து வழங்குமாறும் நிர்வாகத்திடம் பலமுறை இவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தாகவும் கடந்த 90 நாட்களுக்கு மேலாக இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த போதும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருமாறு கோரியே இவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் தங்களுடைய பணி பகிஸ்கரிப்பை ஆரம்பித்த ஊழியர்கள், இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சம்பவ இடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ் எச் எம் நியாஸ் வருகைதந்து பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் சம்மந்தப்பட்ட இடங்களுக்கும் தொடர்பு கொண்டு உரையாடானார்.
மேலும் இன்றைய தினம் புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறுகின்றமையினால் பிரதேச செயலகத்தை நோக்கி வாகனத்திலும் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு பட்டிகளை அணிந்தவாறு பாலாவிலிருந்து புத்தளம் நோக்கி படையெடுத்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)