தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு
தென்னை முக்கோண வலயத்தை அண்மித்துள்ள காணிகளை மையமாக வைத்து 05 ஏக்கர் தென்னை காணிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு ஒன்று கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தொழில் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் தெங்கு பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி ஆகியோரின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (01) இடம்பெற்றது.
நாட்டில் தென்னை உற்பத்தியை அதிகரிப்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2030 ஆம் ஆண்டில் தேசிய தென்னை உற்பத்தியை வருடாந்தம் 4,200 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு திட்டமிடமிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது இருக்கும் தென்னை காணிகளை சரிசெய்து மிகவும் திறம்பட முகாமை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் தென்னை முக்கோண வலயத்தில் உள்ள புத்தளம், கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலில் தெங்கு பயிர்ச்செய்கை சபையின் அதிகாரிகள், கம்பஹா பிரதேச செயலகத்தின் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தென்னை பயிர்செய்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





(ரிஹ்மி ஹக்கீம்)