சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சமூக வலுவூட்டல் செயலமர்வு
வணிகத் திறன் அபிவிருத்தி தொடர்பான சமூக வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்தி
அபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப் அவர்களின் பங்குபற்றலுடன் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.றஹ்மத்துள்ளாஹ்வின் தலைமையில் 2025.07.01 ம் திகதி நடைபெற்றது.இதில் நிந்தவூர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக சம்மாந்துறை தலைமைப் பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.பி எம்.ஹுசைன், அம்பாறை மாவட்ட உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஸட்,ஏ.ஏ.றஹ்மான் மற்றும் இறக்காமம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.ஏ.நஜீம் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நடாத்தினர்.





(இஸட். ஏ. றஹ்மான்
ஒலுவில் விசேட செய்தியாளர்)