ஊழல் மோசடி ஒழிப்புக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜப்பான்
ஜக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்UNDP) கீழ் இலங்கையின் மலிந்து காணப்படுகின்ற லஞ்சம் அல்லது ஊழல்களை ஒழிப்பதற்கும் அதற்கு வழக்குத் தொடர்தல் ,
போன்ற 3 வருடத் திட்டத்திற்காக யப்பான் துாதுவர் – இலங்கையில் உள்ள ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டம் ஊடாக 2.5 மில்லியன் அமேரிக்க டொலர்களை –
நீதி அமைச்சின் கீழ் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல் ஆனைக்குழுவுக்கு இந் நிதியை வழங்கியுள்ளது.
இந் நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்சன நானயக்கார, ஜப்பான் இலங்கைக்கான துாதுவர் அக்கியோ இஸ்மோட்டா, யு.என்.டி.பி இலங்கைப் பிரதிநிதி அசுசா குப்டா ஆகியோர்கள் ஊடாக இந் நிதி லஞ்ச ஆணைக்குழுவின் ஆணையாளர் கே.பி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
(அஷ்ரப் ஏ சமத்)