செவாட் கிக் பொக்சிங் போட்டியில் கம்பளை கிக் பொக்சிங்க அணி சம்பியன்..!
ஜனாதிபதி அநுரகுமார ஆட்சியில் எந்தளவுக்கு கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றதோ அதே போன்று விளையாட்டுத் துறைக்கும் சரி சமனாக முக்கியத்துவம் அளித்து அதற்குரிய பாரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி விளையாட்டுத் துறையை மேம்படுத்து வருகின்றனர் என்று கண்டி மாவட்டப் பாரளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்
விளையாட்டுத் துறை அமைச்சு , 68 வது கிக் பொக்சிங் தேசிய சம்மேளனம், மற்றும் கண்டி மாவட்ட அவாட் கிக் பொக்சிங் சங்கம் ஆகியன இணைந்து மத்திய, சப்ரகமுக மாகாண மட்டத்தில பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கம்களை சாஹிரா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டப் பாhரளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது . தேசிய கிக் குத்துச் சண்டை சம்மேளனத்தின் தலைவர் பாரிஸ் மௌலானா, மத்திய மாகாண கிக் குத்துச் சண்டை சங்கத்தின் தலைவர் டி. எம். நௌசாட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உரிமையாளர் நிம்ஸாட், மத்திய மாகாண கிக் குத்துச் சண்டை சங்கத்தின் செயலாளா டி. எம். எப். மூவி. கம்பளை நகர சபை உறுப்பினர்களானன எம். சுபியான், சியாட் ;, கண்டி மாவட்ட குத்துச் சங்கத்தின் உப தலைவர் டொக்டர் மின்ஹாஜ் ஆகிய முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த 15 கிக் பொக்சிங் விளையாட்டு கழகங்கள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக கம்பளை சீன குங்பு நட்புறவு செவாட் கிக் பொக்சிங் எக்டமி பதக்கங்களை வென்று சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இலங்கை சீன குங்பு நட்புறவு செவாட் கிக் பொக்சிங் எக்டமி பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தையும், கண்டி ஸ்ரீ சந்திரானந்த பௌத்த கல்லூரி பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்;டமை Pஇங்கு குறிப்பிடத்தக்கது.
(இக்பால் அலி)





