பெருந்திரளானோர் பங்கேற்புடன் பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை..!
அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த நாட்டிற்றும் சமுகத்திற்கும் அளப்ரிய சேவையாற்றிய கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று திங்கற்கிழமை கொழும்பு 10இல் உள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். நியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சூரா கவுன்சிலின் தலைவருமான எம்.எம்.சுஹைர் கலந்து கொண்டார் கௌர அதிதியாக தொழில் அதிபர் மாஹிர் ஹாஜியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பாடசாலை மாணவர்கள், அஹதிய்யா பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அஸ்ஸெய்க் இன்ஹாம் இஸ்ஹாபின் கிராஅத்துடனும் கம்பளை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் வரவேற்பு கீதங்களுடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். நியாஸ் தலைமையுரையாற்றினார், அறிமுக உரையை அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எம்.இஸட் அஹமட் முனவ்வரும், கலாநிதி மர்ஹூம் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான ஆய்வுரையை கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் அல்-முஹ்ஸின் விஞ்ஞானக் கல்லூரியின் நிருவாகப் பணிப்பாளருமான எம்.எம்.எம்.ஸாபிர் வழங்கினார், அதனைத் தொடர்ந்து பதியுத்தீன் மஹ்மூத் தொடர்பாக கவிஞர் கல்ஹின்ன பௌமி ஹலீம்டீன் இயற்றிய பாடல் கானொலியும், நஜிமுதீனின் கருத்துரைகளும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியின் உரை இடம்பெற்றது. நன்றி உரையை அமைப்பின் செயலாளர் ஹில்மி முஹம்மத் வழங்கினார் நிகழ்வினை ஹிஸாம் சுஹைல் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின்போது அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்ற அங்கத்தினாரால் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
















