கற்பிட்டியில் சட்டவிரோத மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை மடக்கி பிடித்த பொலிஸார்..!
கற்பிட்டி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழு மடக்கி பிடித்தது.
மேலும் இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி;
கற்பிட்டி பிரதேசத்தில் மண் அகழ்விற்கான அனுமதிப் பத்திரம் இன்றி மண் விநியோகம் நடைபெறுவதாக தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்படி ஐந்து வாகனங்கள் வெவ்வேறு பகுதிகளில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் இவ்வாறான மண் விற்பனை மாபியாக்கள் காணப்படுவதாக அறியக் கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவைகளையும் பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
