ஓய்வு பெறும் கண்டி சாஹிரா அதிபருக்கு கௌரவம்..!
கண்டி சாஹிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) ஓய்வு பெறவுள்ள அதிபர் ஏ.எச் கலிலுர் ரஹ்மானுக்கு கண்டி கல்வி வலய தமிழ்ப் பிரிவு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.
இந்நிகழ்வு இன்று(01) செவ்வாய்க்கிழமை கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஆசிரியராகவும், அதிபராகவும் சுமார் 28 ஆண்டுகள் சேவையாற்றி பணிஓய்வு பெறுகின்ற அதிபர் கலீலுர் ரஹ்மான் கண்டி ,கட்டுகஸ்தோட்டை, தெநுவர முதலான கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பங்களிப்பாற்றியவராவார்
இந்த கௌரவிப்பு நிகழ்வில் கண்டி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ ஆர் எப். அமீன் ,கண்டி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ் தமிழ்ச்செல்வன், உதவிக் கல்விப் பணிப்பாளர் ரமேஷ்பாபு கண்டி சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் சட்டத்தரணி பைசால் முஹம்மத் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதிபர் கலீலுர் ரஹ்மான் கல்வி அபிவிருத்திக்காக செய்த அர்ப்பணிப்புகள் மற்றும் அவரது பொது நலப் பணிகள் பற்றியும் இங்கு பலரும் பேசினர்.
(ரஷீத் எம். றியாழ்)
