இஸ்ரேலின் மிலேச்சத்தனம்..! கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும்,அதற்கு துணை போகும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கொழும்பில் பாலஸ்தீன இன படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்னும் அமைப்பினர் நடை பவணி எதிர்ப்பு ஒன்றினை நடத்தினர்.
மாலை 4.00 மணியளவில் கொம்பனி வீதி வேகன்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்த மேற்படி பேரணி,காலி வீதி ஊடக அமெரிக்க துதரகத்தை சென்றடைந்து.இந்த பேரணியால் கொழும்பு – காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி வரை பெறும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
பேரணியில் மத தலைவர்கள், அரசியல்வாதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,ஆசிரியர் தொழிற்சங்கம் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தினை கண்டித்ததுடன்,இலங்கை அரசும் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.அப்பாவி குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை வகை தொகையின்றி கொண்று குவிக்கும் இரத்தக் காட்டேறிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செயலை கண்டிக்கின்றோம்.
உணவுக்காக இருந்த குழந்தைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் படு மோசமான செயல் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளையும் இதில் ஏந்தி சென்றனர்.மேற்படி பேரணியினையடுத்து அமெரிக்க துதரகம் முன்பாக கடும் பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
