உள்நாடு

இலங்கையில் ஷாதுலிய்யா தரீக்காவை அறிமுகப்படுத்திய ஸாலிஹ் மெளலானா ஞாபகார்த்த மஜ்லிஸ்..!

பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தை (அக்கரகொடை) தாஜூல் மபாஹிரிய்யா ஷாதுலிய்யா, ஸாவியாவில் இலங்கையில் ஷாதுலிய்யா தரீக்கா வை அறிமுகப்படுத்திய ஆத்ம ஞானி முஹம்மத் ஸாலிஹ் (ரஹ்) பெரிய மௌலானா ஞாபகர்த்த மஜ்லிஸ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்று குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளருமான அல்-ஹாஜ் அஷ் செய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி)

கலீபதுஷ்ஷாதுலி மௌலவி எம்.எம்.செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) தலைமையில் (2-7-2025) மாலை நடைபெறுவதுடன் விசேட பேச்சாளராக

கலீபதுஷ் ஷாதுலி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி – பீ ஏகலந்து கொள்வார் இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரச்சுரிக்கப்படுகிறது.

இன்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன் காலஞ்சென்ற காயல்பட்டணம் சங்கைக்குரிய செய்குனா அல்லாமா முஹம்மது அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் (நுஸ்கிய்யி) காலஞ்சென்ற நாயகம் முஹம்மது சாலிஹ் பெரிய மௌலானா ஆகியோரினால் பேருவளை பகுதியில் ஷாதுலிய்யா தரீக்கா ஆன்மீக வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையில் ஷாதுலிய்யா கோட்டை என வர்ணிக்கப்படும் சீனன்கோட்டையில் உள்ள அக்கரகொட ஸாவிய்யா சுமார் 130 வருடங்களுக்கும் கூடிய சரித்திரம் கொண்ட ஷாதுலிய்யா ஸாவியாவாகும். இங்கு தான் ஷாதுலிய்யா தரீக்கா சீனன்கோட்டைக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.யெமன் நாட்டிலிருந்து வந்த அஷ்ஷெய்கு முஹம்மது சாலிஹ் யெமனி (ரஹ்) இந்த ஸாவியாவில் தங்கி இருந்து தரீக்காவின் அனுஷ்டானங்களை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் சீனன் கோட்டை மூத்த பெரியார்கள் அனைவரும் இவ்வழிமுறையை மிக ஆவலுடன் ஏற்று நடைமுறைப்படுத்தினார்கள். பெரிய மௌலானா ஒரு மாபெரும் சட்ட மேதை. புனித மக்கா நாரில் சிறந்த ஹதீஸ் கலை நிபுணராக ஆயிரம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்த ஒரு மகான். ஜித்தாவின் காழி பிரபல நீதிபதி, கௌதுநாயகம் பரம்பரையில் உதித்தவர். அப்போது பாஸி நாயகம் தம்மை இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எமது தரீக்கா விடங்களில் சேர்ந்து விரைவில் நமது பிரதிநிதிகளில் ஒருவராக மாறிவிடுவார்கள் என்று வருமொழி பகிர்ந்தார்கள்.

ஒரு நாள் இரவு பெரிய மௌலானா கனவில் அன்னவர்களின் பாட்டனார் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (றழி) தோன்றி ‘நீர் பாஸி ஆண்டகை’ என உத்தரவிட்டார்கள். அக்கணமே அவர்கள் பாஸி நாயகத்திடம் சென்று தீட்சை பெற்று அவர்களின் கலீபதுல் குலபா பிரதிநிதியாக ஆனார்கள்.அன்னார் இந்தியாவிலும் இலங்கையிலும் பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து ஷாதுலிய்யா தரீக்காவை பரப்பினார்கள். மக்கள் மத்தியில் இந்த தரீக்காவை பற்றி சிறந்த விளக்கம் அளித்து வழிகாட்டியது மட்டுமல்லாது பற்பல ஊர்களில் ஷாதுலிய்யா ஸாவிய்யா உருவாவதற்கு காரண கர்த்தாவாகவும் விளங்கினார்கள். இத்தகைய தரீக்கா பெரியாரின் முயற்சியால் தோன்றியது தான் அக்கரகொடை ஷாதுலிய்யா ஸாவிய்யா என்பது குறிப்பிடத்தக்கது. தரீக்காக்களை உருவாக்கிய ஆத்மீக ஞானிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அரும் பெரும் தியாகங்களைச் செய்த அதே சமயம் இஸ்லாத்திற்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் யுத்த முனைகளுக்கு கூடச் சென்று புனித ஜிகாதில் ஈடுபட்டு இஸ்லாத்திற்கு புத்துயிர் கொடுத்தார்கள். இஸ்லாத்திற்காக தமது உடல்,பொருள் உயிர்களை தியாகம் செய்த ஆத்மீக ஞானிகளை கௌரவிப்பதும், அவர்கள் காட்டிய உண்மையான நேரான வழியில் நடப்பதும் எமது கடமையாகும்.தரீக்காக்கள் அனைத்தும் அல்குர்ஆன்,அல் ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாகும்.குத்துபுல் அக்பர் இமாம் அபுல்ஹசன்அலியுஷ்ஷாதுலி (றழி) அவர்களினால் இன்றைக்கு 850 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட ஷாதுலிய்யா தரீக்கா வழிமுறை இன்று உலகளாவிய நிலையில் பல நாடுகளில் பல கோடி முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது.

இந்த ஸாவியாவை அமைக்க மர்ஹூம் அப்துல் அஸீஸ் மரிக்கார் காணியை அன்பளிப்புச் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த அக்கரகொட ஸாவிய்யா 1935 ஆம் ஆண்டளவில் மர்ஹூம் அஷ் செய்கு முஹம்மது பாஸி பின் முகம்மது இப்ராஹிம் பின் அஷ் செய்கு ஸம்ஸுதீன் முஹம்மதுல் மக்கியுல் பாஸியதுஷ்ஷாதுலி (ரஹ்) அவர்களின் அனுமதிப்படி கலீபத்துஷ்ஷாதுலி மர்ஹூம் பி.ஏ.அப்துல்காதீர் ஆலிம் தலைமையில் புறுதா கந்தூரி சபையில் ஸாவியாவை விஸ்தரிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கமைய அமைய விஸ்தரிக்கப்பட்டது.இப்பணியில் கலீபதுஷ்ஷாதுலி மர்ஹூம் பி.ஏ.அப்துல் காதர் ஆலிம், மர்ஹூம் கலீபதுஷ்ஷாதுலி ஏ.ஸீ.ஏ.முஹம்மது ஹனிபா ஆலிம், மர்ஹூம்களான ஓ.எல்.எம்.ரபாய்,டபிள்யு.எம்.அஹமது இஸ்மாயில்,எம்.எல்.எம்.ஏ.கபூர்,ஓ.எல்.எம்.ஷெய்கு மீரா லெப்பை,எம்.எஸ்.அபூபக்கர்லெப்பை,ஏ.சி.எம்.ஸாலி,ஐ.எல்.எம்.சம்சுதீன்,எம்.எல்.எம்.அப்துர் ரஹ்மான்,சீ.ஏ.வாஹித்,எம்.காலித் இஸ்மாயில்,எஸ்.எம்.அப்துல் காதிர்,டபிள்பூ.எம்.அப்துல் மஜீத்,எம்.எல்.ஏ.மஜீத்,எம்.எல்.எம்.ஐ.மரிக்கார்,டபிள்யூ.எம்.முஹம்மது லெப்பை,ஒ.எல்.எம்.அலியா மரிக்கார்,எம்.ஐ.எம்.அப்துர் ரஹீம்,எஸ்.எம்.எம்.முஹம்மது இப்ராஹிம்,சீ.எம்.முஹம்மது ஹனீபா,எம்.எல்.எம்.அபூபக்கர்,பி.எல்.இப்ராஹீம் லெப்பை,வை.எல்.அப்துல் லதீப் ஆகியோர் ஈடு பட்டு ஸாவியாவை சிறப்பாக நிர்மாணித்முடித்தார்கள்.

பின்னர் 1975 ஆம் ஆண்டளவில் கொடை வள்ளல் மர்ஹூம் எம்.ஐ.எம்.நளீம் ஹாஜியார் தலைமையில் ஊர் மக்களின் அமோக பங்களிப்புடன் அழகான முறையில் இந்த ஷாவிய்யா புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


ஸாவியாவில் அன்று முதல் ஆன்மீக ஞானி முஹம்மது ஸாலிஹ் பெரிய மௌலானா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் மஜ்லிஸ் இடம் பெற்று வருகிறது. இந்த மஜ்லிஸை சிறப்பாக நடத்துவதில் ஸாவியாவை நிர்வாகித்த முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள்,தற்போதைய உறுப்பினர்கள்,சீனன் கோட்டை பள்ளிச் சங்கம்,பிரதேச இஹ்வான்கள் மற்றும் சீனன்கோட்டை இஹ்வான்களின் பங்களிப்பு மகத்தானது. இவர்களை நன்றியுடன் நினைவு கூற வேண்டும். அத்தோடு சாதுலிய்யா தரீக்கா பணியை இந்த ஸாவியாவில் முன்னெடுக்க அயராது பாடுபட்ட மர்ஹூம் முகத்தமுஷ்ஷாதுலி அல்-ஹாஜ் ஜுனைத் ஹாஜியார் மர்ஹூம் முகத்தமுஷ்ஷாதுலி அல்-ஹாஜ் முஹம்மது ரவூப் ஜே.பி. ஆகியோரின் பங்களிப்பையும் நினைவு படுத்துகிறோம்.

சீனன் கோட்டைத் பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம்.முக்தார் ஹாஜியார்,ஸாவியா நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் மர்ஹூம் மர்ஸூக் ஹாஜியார் இவர்களோடும் அதற்கு முன்னரும் ஸாவியாவை நிர்வகித்த உறுப்பினர்கள் உட்பட பேர் குறிப்பிடாத அனைத்து பிரதேச முக்கியஸ்தர்களையும் நினைவு கூறுகின்றோம்

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *