விளையாட்டு

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை ஏ அணியில் மொஹம்மட் சிறாஷ்..!

அஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை ‘ஏ’ அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆகிய தொடர்களில் இலங்கை ஏ அணி அவுஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகள் முறையே 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. மேலும் முதல் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி 13 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையும், 2ஆவது போட்டி 20ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது. இப் போட்டிகள் அனைத்தும் டெர்பனில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை ஏ அணியின் ஒருநாள் அணிக்கு லஹிரு உதார அணியின் தலைவராகவும், 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பசிந்து சூரியபண்டார தலைவராகவும் இலங்கை அணியை வழிநடாத்துகின்றனர்.

மேலும் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்ற வீரர்களான முஹம்மது சிராஸ் , கமில் மிஷார, நுவணிந்து பெர்ணான்டோ, பவன் ரத்நாயக்க, செனால் டினூஷ பிரமோத் மதுஷான் ஆகியோர் இலங்கை ஏ அணியை பிரதிநிதித்துவம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *