சிவில் சமூக அமைப்புகள் அமைச்சர் வசந்தவுக்கு எதிராக சி.ஐ.டி யில் முறைப்பாடு
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நேற்று (30) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உப்பு இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளன.
கிட்டத்தட்ட 75 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பு தற்போது சந்தையில் 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, உப்பு இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கான ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்புகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.