புத்தளம் சோல்ட் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு சுமூகமான தீர்வு..!
புத்தளம் சோல்ட் நிறுவன ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி அதன் நிருவாகத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அறிந்த கற்பிட்டி மற்றும் புத்தளம் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம். பைசல் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.ரிகாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடனும் புத்தளம் சோல்ட் நிறுவன நிருவாகத்துடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்து வைத்தனர்.
ஊழியர்களின் சம்பள உயர்வானது அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனும் உறுதி மொழியை நிருவாகத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஊழியர்கள் பகிஷ்கரிப்பை கைவிட்டு வேலைக்கு திரும்பினர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

