தன் கையால் எழுதிய அல் குர்ஆன் பிரதியை மஹராக வழங்கிய மணமகன்..!
தன் கையால் எழுதிய புனித அல் குர்ஆன் பிரதியை மஹராகப் பரிசளித்த மணமகன் நேற்று (ஜூன் 27) அஸர்த்தொழுகையின் பின் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிக்காஹ் நிகழ்வின் போதே மணமகனின் கைகளால் முழுமையாக எழுதப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதி மணமகளுக்கு மஹராக வழங்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொலன்னறுவை மஜீதியா அறபுக்கல்லூரியில் கற்றவரான குறித்த மணமகன் இஸ்மத் இலாஹி, ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா அறபுக்கல்லூரியில் கல்வி பயின்ற தனது மணமகளுக்கு குறித்த மஹரை வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி மணமக்களை வாழ்த்தி திருமண உரையை நிகழ்த்தினார்.
அவரது உரையின் போது, மணமகனால் மணமகளுக்கு மஹராக வழங்கப்படுபவைகளில் மணமகனின் கைகளால் எழுதி முடிக்கப்பட்ட புனித குர்ஆனும் அடங்குவதாகக்கூறி அதனை சபையில் காண்பித்தார்