சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைப்பு..!
புதிய காத்தான்குடி கிழக்கு 167.பி கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) மேற்படி கிராம சேவகர் பிரிவின் பலநோக்கு மண்டபத்தில் குழுவின் தலைவர் ஏ.எல்.முனீர் அஹமட் தலைவமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க கலந்து கொண்டார்
இக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் கலீல்டீன், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி மபாஸா சுல்பிகார் அலி, சமுர்தி உத்தியோகத்தர் மர்சூக்கா றபீக், உபதலைவர் ஏ.எல்.அம்ஜத், உப செயலாளர் ஏ.ஐ.ஏ.அக்பர், சிவில் பாதுகாப்பு குழுவிற்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை முழுவதிலுமுள்ள சகல மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு உள்ளடங்குமாறு சாதி, மத, குல, ஏழை மற்றும் பணக்கார பேதமின்றி அல்லது அரசியல் பேதமின்றி சிவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு பொலிஸார் சகல மக்கள் குழுவினருடனும் வாழ்ந்து, செயற்பட்டு மக்கள் வாழ்க்கை தொடர்பாக நன்கு ஆராய்ந்து விளங்கிக் கொண்டு சம்பவங்களுக்கு அடித்தாளமிடும் விடயங்களைத் தடுத்தல் மற்றும் தீர்ப்பளித்தலுக்கான உபதேசம், அதன்படி செயற்படல், பூரணத்துவம், பொறுப்பு மற்றும் செயற்பாட்டுப் பிரவேசம் ஆகியவற்றினூடாக சிவில் பாதுகாப்பு குழு செயற்பட எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.ஐ.அப்துல் நஸார்)







