உள்நாடு

கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு உம்ரா வாய்ப்பு..!

தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்யாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடாத்தப்பட்ட கிராத் போட்டியில் முதலிடத்தை பெற்ற கொழும்பு டி. எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவன் வெலிகமையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு SUHAIR HAJJ TRAVELS நிறுவனத்தின் ஊடாக இலவசமாக உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு ஒன்றை செய்து கொடுக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை 27/06/2025 ஜும்மா தொழுகைக்குப் பின்பு தர்கா நகர் தெரு மீரா ஜூம்மா பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உப தலைவர் அஷ் ஷேக் அல் ஆலிம் யூசுப் முப்தி அவர்களினால் உம்ராவுக்கான விமான சீட்டை வழங்கி வைப்பதையும் அருகில் SUHAIR HAJJ TRAVELS உரிமையாளர் தேசபந்து அல்ஹாஜ் ஏ.பீ.எம். ஸூஹைர் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.

(பேருவலை பீ.ம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *